திங்கள், 17 பிப்ரவரி, 2020

தொப்புள் கொடி பதப்படுத்தும் முறை

       குழந்தை பிறந்து எட்டு நாட்களுக்கு பிறகு தொப்புள் கொடி தானாக பிரிந்து விழும். அதை எடுத்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வெயிலில் அதை காய வைத்தல் வேண்டும். நன்கு காய்ந்தவுடன் இடித்து பொடி செய்து ஒரு தாயத்தின் உள்ளோ அல்லது வேறு சிறு பாத்திரத்திலோ அதை அடைத்து வைக்க வேண்டும். பின் நாட்களில் குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்படும்போது பால் அல்லது தண்ணீரில் சிறிதளவு பொடி கலந்து தர உபாதைகள் நீங்கும்.


இது குழந்தைக்கு மட்டும் அல்லாது குடும்பத்திற்கும் அருமருந்தாக உதவும்.

இது நம் முன்னோர்கள் பின்பற்றிய முறையாகும். இதுவே தற்போது 'ஸ்டம் செல்' எனவும் 'அம்பிலிக்கல் கார்டு பாங்' எனவும் தனியார் நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. 


இதற்கு ஆண்டுதோறும் கட்டணம் வசூலிக்கப்படும். நம் தேவைக்கும் பதிவு செய்து வாங்க நேரிடும். அவ்வாறு பெறப்படும் பொருள் நமது பொருள் என்று உறுதி செய்யவும் இயலாது. ஆகையால் நாம் நம் முன்னோர்களை பின்பற்றி வாழ்வது நலம்.

செவ்வாய், 24 டிசம்பர், 2019

சேலை கட்டிய மாதரை நம்பாதே

 இப்பழமொழியின் உண்மை வடிவம் யாதெனில் 'சேல் அகட்டிய மாதரை நம்பாதே'.



 இதன் பொருள்: சேல் என்றால் பார்வை, அதாவது கணவன் உடன் இருக்கும் பொழுது தனது பார்வையை வேறு ஆடவரிடம் செலுத்தும் பெண்ணை நம்பாதே என்பதே ஆகும். இதுவே மறுவி 'சேலை கட்டிய மாதரை நம்பாதே' என்றானது.

 

திங்கள், 21 ஜனவரி, 2019

திருநீறு இடுவதின் அறிவியலும் தத்துவமும்

     

   

        திருநீறு நாம் தினமும் இடும் ஒரு பூஜை பொருள். நாம் கோவிலுக்கு சென்றால் அங்கே அர்ச்சகர் இந்த திருநீறை அளிப்பார், நாள்தோறும் இல்லத்தில் விளக்கேற்றியபின் நம் அன்னை நமக்கு திருநீறு அளிப்பார்கள், நாம் வெளியில் செல்லும்பொழுது கட்டாயம் திருநீறு இடவேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
   
       ஆனால் இதை நாம் இடுவதின் காரணம் தான் என்ன?

       மாட்டுச்சாணத்தை உலரவைத்து அதன்பின் சாம்பல் செய்வதே இந்த திருநீறாகும். இதன் தத்துவம் யாதெனில் இதை ஒருவன் தினமும் இடும்பொழுது "தானும் ஒரு நாள் இதைபோல் சாம்பலாக நேரிடும், ஆகையால் வாழும் பொழுது ஆணவம், வன்மம், வெறுப்பு, துரோகம் என்று வாழாமல் அனைவரிடமும் அன்பு செலுத்தி நல்லொழுக்கங்களோடும், உயரிய பண்புகளோடும் வாழவேண்டும்" என்ற எண்ணத்தை விதைத்து அவனை நல்வழியில் இட்டுச்செல்வதற்காகவே திருநீறு இடும் வழக்கத்தை நம்முன்னோர்கள் முறைப்படுத்தினர்.

       இதன் அறிவியல் யாதெனில் மாட்டுச்சாணத்திலிருந்து உருவாகும் திருநீற்றில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நாம் பருகும் தண்ணீரில் ஒரு சிட்டிகை சேர்த்தால் ஆக்ஸிஜன் உள்ளடக்கத்தை அதிகரிக்கலாம். தடிப்புகள் மற்றும் தோல் எரிச்சல் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.

நண்பர்களே இதுவே திருநீறு இடுவதின் அறிவியலும் தத்துவமும் ஆகும், திருநீறு மூடநம்பிக்கை அல்ல.

புதன், 31 அக்டோபர், 2018

ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்

                        இது வழக்கில் இருக்கும் பழமொழி ஆகும். இதன் பொருள் ஆயிரம் பேரை கொன்றால் தான் அரை வைத்தியன் ஆவான் என்பதாகும்.
               ஆனால் உண்மையில் இப்பழமொழியின் பொருள் பின்வருவதாகும். அக்காலத்தில் நமது மருத்துவமுறை இயற்கை முறையை சார்ந்து இருக்கும். மூலிகை தாவரங்கள் கொண்டே மருத்துவம் செய்து வந்தனர். அக்காலத்தில் எவன் ஒருவன் வைத்தியத்திற்கு உரிய ஆயிரம் வேர்களை தாவரங்களை அறிந்துள்ளானோ அவனே அரை வைத்தியன் ஆவான்.
                இதுவே பிற்காலத்தில் மருவி தவறான பொருளில் வந்து நிற்கிறது. பழமொழியையும் அதன் பயன்பாட்டையும் அறிவோம்.

சனி, 25 ஆகஸ்ட், 2018

விதி




        அழகாய் புள்ளி வைத்து தெளிவாய் இட்ட கோலமும் 
              அலங்கோலம் ஆகும் கொட்டும் மழையில் இடும்பொழுது!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

வள்ளுவரின் காதல்!


     







திருவள்ளுவர். பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர். கணவன் மனைவி ஒற்றுமையை விளக்கவும், இனிய இல்லறத்திற்காகவும் 'காமத்துப்பால்' என்று முப்பாலில் ஒன்றை இயற்றியவர். அவரின் காதல் மனைவியே வாசுகி அம்மையார் ஆவார்கள்.


வாசுகி அம்மையார் தன் வாழ்நாள் முழுதும் கணவரின் சேவையை தன் பாக்கியமாக எண்ணி வாழ்ந்தவர், கணவரின் செயல்களுக்கு அர்த்தம் இருக்கும் என்று எண்ணுபவர். அதனால் கணவரிடத்தில் எக்கேள்வியும் வினவவில்லை. அப்பத்தினி அம்மையார் தான் இறக்கும் தருவாயில் கணவர் அருகில் இருக்கும் பொழுது கணவரை காண்கிறார்.


கணவரோ, "உன் மனதில் இருக்கும் ஐயத்தை கேள்" என்கிறார். வாசுகி அம்மையார் அதற்கு, " ஐயனே தம் செயல்களுக்கு ஒரு கரணம் இருக்கும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் தாம் உணவு உண்ணும் வேளையில் ஒரு கொட்டாங்குச்சியில் நீரும் ஒரு ஊசியும் அருகில் வைத்துக்கொண்டு உணவு உண்பிர்கள். அதன் காரணத்தை அறிய விழைகிறேன்".


அதற்கு வள்ளுவர் கூறிய பதில் யாதெனில், " உண்ணும் பொழுது பருக்கை கீழே சிதறினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் இருக்கும் நீரில் கழுவி உண்பதற்காகவே அதை வைத்திருந்தேன். நியோ ஒரு பருக்கை கூட சிதறியதில்லை ஆகையால் அதன் பயன்பாட்டை நீ அறியவில்லை" என்று கூறினார்.


இத்தகைய தர்ம பத்தினிக்காக திருவள்ளுவர் ஒரு நான்கு வரி பாடல் இயற்றினார்.


"அடியிற்கினீயாளே அன்புடையாளே


படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி


பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் -


இனீதாய் என் தூங்கும் என்கண் இரவு"





இதன் விளக்கம் யாதெனில் "அடியேனுக்கு இனியவளே, அன்புடையவளே, என் சொல்படி நடக்க தவறாதவளே, என் பாதங்களை வருடி தூங்க செய்பவளே, எனக்கு பின் தூங்கி முன் விழிப்பவளே, இனி உனைபிரிந்து எப்படி என் கண்கள் இரவில் உறங்கும்". இதுவே திருவள்ளுவர் தன் மனைவிக்காக எழுதிய நான்கு வரி செய்யுள்.








குழந்தைகளுக்கு தாயத்து அணிவிப்பதின் காரணமும் அறிவியலும்

    
         குழந்தை பிறந்தவுடன் அதன் தொப்புள் கொடியயை காயவைத்து இடித்து பொடியாக்கி அதை தயத்தினுள் வைத்து ஒரு கயிற்றில் நூர்த்து குழந்தைக்கு கழுத்தில் அணிவிப்பார்கள். இதன் நோக்கம் யாதெனில் பிற்காலத்தில் குழந்தை நோயுற்ற வேலையில், தயத்தினுள் இருக்கும் பொடியை பாலில் கலந்து  குழந்தைக்கு கொடுப்பார்கள், இதானால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகி குழந்தை உடல் நலம் சீராகும்.
          
       குழந்தைகள் வளரும் பருவத்தில் சிறிய பொருள்களை வாயில் வைத்து மெல்லும், அப்பொழுது இந்த தாயத்தையும்  மெல்வதால் இதனுள் இருக்கும் பொடி குழந்தையின் உடலில் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதுவே நம் முன்னோர்களின் அறிவியலும் வாழ்க்கை முறையும் ஆகும்.
     
      நாமோ நாகரிகம் என்ற பெயரால் தொப்புள் கொடியை தூக்கி எறிந்தோம். பின்நாட்களில் மேல்நாட்டவர் இதை 'ஸ்டெம் செல் தெரப்பி' என்று கூற அதன் முறைப்படி தொப்புள் கொடியை பாதுகாக்க வருடத்திற்கு இருபது ஆயிரம் என்று செலவு செய்து மற்றவரிடம் நிற்கின்றோம். இதுவே நாகரீகத்தால் விளைந்திருக்கும் நன்மை.
 
    நாகரிகம் என்று பெயரால் நாம் இழந்தது அறிவியல் மட்டும் இல்லை நம் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியமான எதிர்காலமும் தான். 

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பழமொழி அறிவோம்!

கழு தைக்க   தெரியுமாம்  கற்பூர வாசனை 

          
 'கழு' என்பது ஒரு வகை 'கோரை புல்' ஆகும்.  அது பாய் தைக்க பயன்படுத்துவர். 'கழு' பாய் தைக்கும் பொழுது அதில் கற்பூர வாசனை வரும். அதைத்தான் நம் முன்னோர்கள் 'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை' என்று கூறினர். இதுவே மருவி 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை' என்று வழக்கானது. 

     

தொப்புள் கொடி பதப்படுத்தும் முறை

       குழந்தை பிறந்து எட்டு நாட்களுக்கு பிறகு தொப்புள் கொடி தானாக பிரிந்து விழும். அதை எடுத்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வெயிலில் அதை காய ...