செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

வள்ளுவரின் காதல்!


     







திருவள்ளுவர். பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர். கணவன் மனைவி ஒற்றுமையை விளக்கவும், இனிய இல்லறத்திற்காகவும் 'காமத்துப்பால்' என்று முப்பாலில் ஒன்றை இயற்றியவர். அவரின் காதல் மனைவியே வாசுகி அம்மையார் ஆவார்கள்.


வாசுகி அம்மையார் தன் வாழ்நாள் முழுதும் கணவரின் சேவையை தன் பாக்கியமாக எண்ணி வாழ்ந்தவர், கணவரின் செயல்களுக்கு அர்த்தம் இருக்கும் என்று எண்ணுபவர். அதனால் கணவரிடத்தில் எக்கேள்வியும் வினவவில்லை. அப்பத்தினி அம்மையார் தான் இறக்கும் தருவாயில் கணவர் அருகில் இருக்கும் பொழுது கணவரை காண்கிறார்.


கணவரோ, "உன் மனதில் இருக்கும் ஐயத்தை கேள்" என்கிறார். வாசுகி அம்மையார் அதற்கு, " ஐயனே தம் செயல்களுக்கு ஒரு கரணம் இருக்கும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் தாம் உணவு உண்ணும் வேளையில் ஒரு கொட்டாங்குச்சியில் நீரும் ஒரு ஊசியும் அருகில் வைத்துக்கொண்டு உணவு உண்பிர்கள். அதன் காரணத்தை அறிய விழைகிறேன்".


அதற்கு வள்ளுவர் கூறிய பதில் யாதெனில், " உண்ணும் பொழுது பருக்கை கீழே சிதறினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் இருக்கும் நீரில் கழுவி உண்பதற்காகவே அதை வைத்திருந்தேன். நியோ ஒரு பருக்கை கூட சிதறியதில்லை ஆகையால் அதன் பயன்பாட்டை நீ அறியவில்லை" என்று கூறினார்.


இத்தகைய தர்ம பத்தினிக்காக திருவள்ளுவர் ஒரு நான்கு வரி பாடல் இயற்றினார்.


"அடியிற்கினீயாளே அன்புடையாளே


படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி


பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் -


இனீதாய் என் தூங்கும் என்கண் இரவு"





இதன் விளக்கம் யாதெனில் "அடியேனுக்கு இனியவளே, அன்புடையவளே, என் சொல்படி நடக்க தவறாதவளே, என் பாதங்களை வருடி தூங்க செய்பவளே, எனக்கு பின் தூங்கி முன் விழிப்பவளே, இனி உனைபிரிந்து எப்படி என் கண்கள் இரவில் உறங்கும்". இதுவே திருவள்ளுவர் தன் மனைவிக்காக எழுதிய நான்கு வரி செய்யுள்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொப்புள் கொடி பதப்படுத்தும் முறை

       குழந்தை பிறந்து எட்டு நாட்களுக்கு பிறகு தொப்புள் கொடி தானாக பிரிந்து விழும். அதை எடுத்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வெயிலில் அதை காய ...